சுவிஸ்லாந்தில் மக்கள் தொகை உயர்வு!

சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை 8 மில்லியனில் இருந்து 9 மில்லியனாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு மில்லியன் வரை உயர்வதற்கு 12 ஆண்டுகள் ஆனது (2012 முதல் 2024 வரை), எனவும், அதேவேளை 5-யில் இருந்து 6 மில்லியனாக அதிகரிக்க 12 ஆண்டுகள் (1955-1967) எடுத்ததுள்ளது எனவும் தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தரவுகளின் அடிப்படையில் நிரந்தரமாக வசிப்பவர்களில் 6,560,361 பேர் சுவிஸ் மக்கள் என்றும் 2,442,402 பேர் வெளிநாட்டினர் எனவும் தெரியவருகின்றது.

குறித்த தரவுகளின் படி, 20 மற்றும் 64 வயதுக்கு இடைப்பட்டவர்கள் சுமார் 5.460 மில்லியன் மக்கள் எனவும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கிட்டத்தட்ட 1.790 மில்லியன் எனவும், 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 1.753 மில்லியன் எனவும் தெரியவருகின்றது.

கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் இறுதியில், சுவிஸில் முதன்முறையாக 9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசித்து வருவது கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த எண்ணிக்கையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போன்ற நிரந்தரமற்ற வெளிநாட்டவர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டது.