நடிகை கனகா ஷாப்பிங் மால் ஒன்றில் ரசிகருடன் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகை கனகா
தமிழ் சினிமாவில் 80களில் கொடிகட்டி பறந்த நடிகை கனகா தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து அசத்தினார்.
தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்திய நடிகை கனகா, பழம்பெரும் நடிகை தேவிகாவின் ஒரே மகள் ஆவார்.
தந்தையின் ஆதரவு இல்லாமல் தாயின் அன்பினால் வளர்க்கப்பட்ட கனகாவிற்கு கரகாட்டக்காரன் படம் தான் மிகவும் புகழை வாங்கிக் கொடுத்தது.
திடீரென இவரது தாய் உயிரிழந்த நிலையில், நடிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன அழுத்தத்திற்கு மூழ்கினார். தந்தையும் சொத்துப் பிரச்சினையால் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு வீட்டிற்குள்ளே சிறை வாழ்க்கை வாழ்ந்தார். நடிப்பிலிருந்து விலகிய இவர் உயிருடன் இருக்கின்றாரா? என்ற கேள்வி அடிக்கடி எழும்பி வந்த நிலையில், அவ்வப்போது அவரது புகைப்படம் வெளியாகி வருவது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கின்றது.
தற்போதைய புகைப்படம்
கடந்த ஆண்டில் குட்டி பத்மினி நடிகை கனகாவை சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலான நிலையில், அதன் பின்பு அவர் போன் செய்தாலும் கனகா எடுக்கவில்லையாம்.
மீண்டும் வீட்டுக்குள்ளேயே தனிமையில் இருக்கிறாரே என்று ரசிகர்கள் பலரும் வருந்தி வந்த நிலையில், தற்போது அவருடைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.
ஆம் ஷாப்பிங் மால் ஒன்றில் ரசிகர் ஒருவர் கனகாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.