நாட்டு மக்களின் வாக்குகளால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) மலையக மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் ( Velusamy radhakrishnan) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தேர்தல் நிறைவடைந்து மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அனைத்து மக்களையும் ஒன்றினைத்து இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் இந்த நாட்டு மக்களின் பாரிய எதிர்பார்ப்பையும் அவர்களுடைய எதிர்காலத்தை சுபீட்சமாக அமைப்பதற்கும் தாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
தேர்தலின் பின்பு அனைத்து நாட்டு மக்களையும் கடந்த கால ஜனாதிபதிகளைப்போல இன மத மொழி ரீதியாக பாகுபடுத்தாமல் அனைவரையும் ஒரு தாயின் பிள்ளைகளாக நினைத்து செயற்படுகின்ற திறமை உங்களிடம் இருக்கின்றது என்பதை நாம் அறிவோம்.
உங்களுடைய தலைமைத்துவத்தை உண்ணிப்பாக கவனித்தமை காரணமாகவும் தாங்கள் அனைவரையும் அரவனைக்கின்ற அந்த உயரிய நிலைமை மிகவும் எளிமையாக நடந்து கொள்கின்ற தன்மை பொன்றவை காரணமாக நாம் 2017 ஆண்டு மலையக மக்கள் முன்னணி நடாத்திய இளைஞர் மாநாட்டிற்கு உங்களை சிறப்ப விருந்தினராக அழைத்திருந்தோம்.
இந்த நாட்டு மக்களின் நிலைமையை தாங்கள் நன்கு அறிவீர்கள் ஏனெனில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இன்று இந்த நாட்டின் உயர் பதவியை அடைந்திருக்கின்றீர்கள்.எனவே நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதில் முன்னின்று செயற்படுவீர்கள்.