நாட்டில் ரணில் அரசினால் நியமிக்கப்பட்ட பல நிறுவனங்களின் தலைவர்கள் ஏற்கனவே தமது இராஜினாமாக்களை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவையின் கீழ் இருந்த நிறுவனங்களை அப்போது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அனைத்து தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள் இந்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பதவி விலக உள்ளனர்.
அவர்களின் பதவி விலகல், புதிய ஜனாதிபதி அனுரவினதும் , அரசாங்கத்தினதும் தேவைக்கேற்ப நிறுவனங்களின் தலைவர்களை நியமிக்க வழி செய்கிறது.
அதேவேளை , புதிய ஜனாதிபதி அனுர திஸாநாயக்க இதுவரை எந்தவொரு நிறுவனத்திற்கும் புதிய தலைவர்களை நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.