பிரபல ரிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க தேதியை ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் அதிகமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் இந்நிகழ்ச்சி தற்போதும் மக்களுக்கு பிடித்த நிகழ்ச்சியாக இருந்து வருகின்றது.
இந்நிகழ்ச்சியில் முதல் சீசன் முதல் கடந்த ஆண்டு நிறைவடைந்த 7வது சீசன் வரை கமல்ஹாசன் தான் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் பரபரப்பாக செல்லும் இந்நிகழ்ச்சியில் எதிர்பாராத டுவிஸ்ட்டை பிரபல ரிவி வைத்தது. ஆம் இதில் தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன் இந்த ஆண்டு சொந்த வேலை காரணமாக விலகியுள்ளார்.
இவருக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் குறித்த நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகும் என்ற கேள்வி மக்களிடையே அதிகமாக இருந்து வந்த நிலையில், இதற்கான பதில் தற்போது காணொளி ஒன்றின் மூலம் வெளியாகியுள்ளது.
ஆம் ஏற்கனவே விஜய்சேதுபதியை அறிமுகப்படுத்திய ப்ரொமோ காட்சி தற்போதும் வெளியாகியுள்ளது. இதில் அக்டோபர் 6ம் தேதி மாலை 6 மணிக்கு ஆரம்பமாக உள்ளதாக பிரபல ரிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.