தலைமுடி கொட்டுதா இதனை செய்து பாருங்கள்

பொதுவாக தலைமுடி உதிர்வது பிரச்சினை தற்போது பலர் சந்தித்து வருகின்றனர். ஒருவரது அழகை மேம்படுத்தி காட்டுவதில் தலைமுடிக்கு முக்கிய பங்கு உள்ளது.

ஆனால் தற்போது இருக்கும் மோசமான பழக்கங்கள், ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், மன அழுத்தம், நவீன மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்கள் தலைமுடி ஆரோக்கியம் இல்லாமல் உதிர்ந்து விடுகின்றது.

தலைமுடி உதிர்வு ஏற்படும் போது அதனை ஆரம்பத்திலேயே தடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் நாளடைவில் உதிர்வு அதிகமாகி தலையிலுள்ள முடி அனைத்தும் உதிர்ந்து விடும். இதனால் நாம் சீக்கிரம் வழுக்கையாகி விடுவோம்.

அந்த வகையில் தலைமுடி உதிர்வை கட்டுபடுத்தி, வளர்ச்சியை அதிகப்படுத்தும் வேலையை அன்னாசிப்பூ செய்கின்றது. இதனை எப்படி தலைக்கு பயன்படுத்துவது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. அன்னாசிப்பூ மற்றும் ஆலிவ் ஆயில் Mask
அதிகமான தலைமுடி பிரச்சினையுள்ளவர்கள் அன்னாசிப்பூவை அரைத்து பொடி செய்து, அதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து Paste பதத்தில் வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதனை தலையில் தடவி சரியாக 30 நிமிடங்கள் வரை வைத்து விட்டு Mild shampoo பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தலைமுடி உதிர்வு கட்டுபாட்டிற்குள் வந்து விடும்.

2. அன்னாசிப்பூ மற்றும் எலுமிச்சை சாறு
தலைமுடி அதிகமானால் ஒரு பவுலில் அன்னாசிப்பூ பொடி மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் சேர்த்து Paste போல் கலந்து அதனை தலையில் தடவி கொள்ளவும்.
சரியாக 15 நிமிடங்களுக்கு பின்னர் Mild shampoo பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்யலாம். சிறந்த பலன் கிடைக்கும்.

3. அன்னாசிப்பூ மற்றும் முட்டை Hair Mask
வழக்கமாக செய்யும் Hair Mask-ஐ விட இது கொஞ்சம் ஆரோக்கியமானது. ஒரு பவுலில் அன்னாசிப்பூ பொடி, முட்டையின் வெள்ளைக்கரு இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொள்ளவும்.
பின்னர் தலைமுடி நன்றாக வாரி விட்டு தலைக்கு படும்படி நன்றாக பேக்கை தடவவும். தடவி 30 நிமிடம் ஊற வைத்து ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
இந்த பேக் செய்வதால் தலைமுடிக்கு ஊட்டமளித்து தலைமுடியை வளர வைக்கும்.