இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜிதஹேரத்திற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பதிவில் இதனை தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்திய இலங்கை இடையிலான நாகரீக உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகளிற்கும் இடையிலான பாரம்பரியமான நெருக்கமான நட்புறவை வலுப்படுத்துவதற்கும் தனது அர்ப்பணிப்பை வெளியிட்டுள்ளார்.