பெரிதும் எதிர்பார்ப்பில் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் வேட்டையன். TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
ஜெய் பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.
இதுமட்டுமின்றி பகத் பாசில், துஷாரா விஜயன், ராணா, ரித்திகா சிங், ரக்ஷன், அபிராமி என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வேட்டையன் படத்தின் டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. வேட்டையன் படத்திற்கான ப்ரீ புக்கிங் வசூல் வெளிநாடுகளில் துவங்கிவிட்டது.
இந்த நிலையில், இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே ரூ. 2 கோடிக்கும் மேல் ப்ரீ புக்கிங்கில் வேட்டையன் படம் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது