மெய்யழகன் இன்று தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ள பெரிய நடிகரின் படம்.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள இந்த படம் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது.
விஜய் சேதுபதி-த்ரிஷாவை வைத்து 96 படம் மூலம் பிரிந்து போன காதலர்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய இயக்குனர் பிரேம் குமார் இந்த மெய்யழகன் படத்தில் பிரிந்துபோன உறவுகளின் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்.
படத்தை பார்த்தவர்களும் கதை சூப்பராக இருப்பதாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்த படத்தில் ரசிகர்களால் ஸ்பெஷலாக பார்க்கப்படுவது கார்த்தி-அரவிந்த் சாமியின் Bromance தான். சூர்யா கூட இப்பட இசை வெளியீட்டு விழாவில் இவர்களின் Bromance பார்க்கும் போது பொறாமையாக இருப்பதாக கூறியிருப்பார்.
இன்று படம் வெற்றிகரமாக வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தில் நடிப்பதற்காக அரவிந்த் சாமி வாங்கிய சம்பள விவரம் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அரவிந்த் சாமி ரூ. 5 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.