மாதவிடாய் என்பது ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு யோனி வழியாக இரத்தப்போக்கு ஏற்படுவதாகும். உங்கள் உடலின் மாதவிடாய் சுழற்சியில் மாதவிடாய் இரத்தப்போக்கு ஒரு இயல்பான பகுதியாக உள்ளது.
இந்த மாதவிடாய் பெண்களுக்கு 12 வயது முதல் ஆரம்பிக்கிறது.ஆனால் இது 17 வயதிற்குள் ஒரு பெண் பிள்ளை இந்த நிலைக்கு உள்ளாகவில்லை என்றால் வைத்தியரிடம் ஆலோசிப்பது நன்மை தரும்.
மாதவிடாயின் முதல் நாளில் இருந்து அடுத்த மாதவிடாய்க்கு முந்தைய நாள் வரை உங்கள் மாதவிடாய் சுழற்சி அளவிடப்படுகிறது. ஒவ்வொருவருடைய சுழற்சியும் வெவ்வேறானது. ஒரு மாதவிடாய் சுழற்சியின் சராசரி காலஅளவு 28 நாட்கள் ஆகும். இந்த மாதவிடாய் காலம் சில பெண்களுக்கு நீடிப்பதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
மாதவிடாய்
மாதவிடாய் மூன்று முதல் ஏழு நாட்கள் வரை உங்கள் மாதவிடாய் நீடிக்கலாம். பெரும்பாலானோர் தங்கள் மாதவிடாய் முழுவதிலும் 80 மில்லிக்கும் குறைவான இரத்தத்தை இழப்பார்கள்.
சிறு அளவில் இருந்து கடும் இழப்பு வரை இரத்தப்போக்கு இருக்கலாம். முதல் மூன்று நாட்களுக்கு இரத்தப்போக்கு அதிகமாக இருந்து இறுதியில் குறைவாக இருக்கலாம். இதன்போது வெளிவரும் இரத்தப்போக்கின் நிறம் அடர் பழுப்பில் இருந்து பளீர் சிவப்பு வரை மாறலாம்.
சில இரத்தக்கட்டிகள் இயல்பானவை, ஆனால் 50 சென்ட் நாணயத்திற்கும் பெரியதான கட்டிகளைக் கண்டால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவத நன்மை தரும். மாதவிடாய் இரத்தப்போக்கிற்கு சிறு நாற்றம் இருப்பது இயல்பானது.இதற்கு கவலை பட தேவையில்லை.
அதிகமான உடற்பயிற்ச்சி
உடற்பயிற்சி செய்யும் விளையாட்டு வீரர்களிடையே அமினோரியா அடிக்கடி ஏற்படும். இதனால் தீவிரமான செயல்பாடு உடலில் மன அழுத்த ஹார்மோன்களை வெளியிடுகிறது. அதனால் தான் இது இனப்பெருக்க ஹார்மோன்களின் தொகுப்பை சீர்குலைக்கிறது.
இதனால்தான் ஒழுங்கற்ற அல்லது தவிர்க்கப்பட்ட மாதவிடாய் ஏற்படுகிறது என தெரியவந்துள்ளது. இந்த அமினோரியா எலும்பு இழப்பு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே உடற்பயிற்சியின் காரணமாக நீங்கள் ஒழுங்கற்ற மாதவிடாய்களை சந்தித்தால் ஒரு நல்ல சுகாதார நிபுணரை அணுகுவதும் அவசியம்.
உடல் பருமன்
உடல் பருமன் ஒரு முக்கியமான இனப்பெருக்க ஹார்மோனான ஈஸ்ட்ரோஜனின் அதிகப்படியான உற்பத்திக்கு உதவியாக இருக்கிறது. இது அதிக ஈஸ்ட்ரோஜன் உங்கள் சுழற்சியை இல்லாமல் செய்து மாதவிடாய்களை முற்றிலுமாக நிறுத்தலாம்.
மாதவிடாய் தாமதமாகும் போது நீங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அவர் அதை உறுதிப்படுத்தி இருந்தால் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுதல் நல்லது. அத்துடன் உடற்பயிற்சி செய்தல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களால் உடல் எடையை குறைக்கலாம்.
மன அழுத்தம்
மன அழுத்தம் நோய் அல்லது உடல் எடையில் விரைவான மாற்றங்களுக்கு வழிவகுக்கும், இது உங்கள் மாதாந்திர சுழற்சியை சீர்குலைக்கும்.
நாள்பட்ட மன அழுத்தம் மற்ற உடல்நலக் கவலைகளையும் பாதிக்கலாம், எனவே இந்த பிரச்னைக்காக தனியான ஒரு மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதற்கான நல்விதை ஆகும்.