தமிழ் சினிமாவில் பல ஹிட் கொடுத்து முன்னணி பாடகியாக வலம் வந்தவர் தான் சுசித்ரா. இவர் சுசி லீக்ஸ் என்ற ட்விட்டர் பக்கம் மூலமாக மிகவும் பிரபலமானார்.
அவர் கரியர் பீக்கில் சென்று கொண்டிருந்தபோது பல சர்ச்சைகளுக்கு ஆளானார். பிறகு, சிறிது காலம் அமைதியாக இருந்த சுசித்ரா மீண்டும் பேட்டிகளில் கலந்து கொண்டு பல நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி வருகிறார்.
அந்த வகையில், தற்போது பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யா குறித்து பேசியுள்ளார். அதில், “அடுத்த ஜென்மத்திலாவது நடிகர் சூர்யா எனக்கு கணவராக வர வேண்டும் என்று நினைத்தேன். நானும் அவரும் இணைந்து ஆயுத எழுத்து என்ற படத்தில் நடித்தோம்.
அவர் ஒரு சிறந்த மனிதர், அந்த படத்தில் சூர்யா நடித்து கொண்டிருந்தபோது நான் அவரை ரசித்து கொண்டிருப்பேன் அந்த அளவிற்கு எனக்கு சூர்யாவை பிடித்தது. அவர் நடித்த அந்த சீன் முழுவதும் நான் அவர் கண்ணை பார்த்து கொண்டிருந்தேன். இதை பார்த்து அந்த படத்தின் இயக்குனரான மணிரத்னம் என்னை திட்டிக்கொண்டே இருந்தார்” என கூறியுள்ளார்.
தற்போது, சூர்யா நடிப்பில் வரும் நவம்பர் மாதம் 14 -ம் தேதி கங்குவா படம் வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.