கனடாவில் உணவு விலை அதிகரிப்பு குறித்து மக்கள் அதிருப்தி

கனடாவில் உணவு விலை அதிகரிப்பு குறித்து மக்கள் அதிருப்தி வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

லாப்ராடோர் பகுதியைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

உணவு அடிப்படை தேவைகளில் ஒன்று எனவும் கூடுதல் விலைக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்வது பொருத்தமற்ற செயல் எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அடிப்படை உணவுப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது நியாயமற்ற செயல் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒரு குடும்பத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

பல குடும்பங்கள் உணவுப் பொருட்களுக்கு செலவிடுவதில் சவால்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளனர்.