வெளியான கா.பொத பரீட்சையில் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் 57 மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தபட்டிருக்கும் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில், இவ்வருடம் 107 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
அவர்களில் ஒரு மாணவர் 9 A சித்திகளையும், மூன்று மாணவர்கள் 8A ,B சித்திகளையும், இரண்டு மாணவர்கள் 8A ,Bசித்திகளையும் பெற்றதோடு ஏனைய 51 மாணவர்களும் உயர்தரத்திற்கு தகுதி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அதேவேளை யுத்தம் நிறைவடைந்து தசாப்த காலம் ஆகியும் குறித்த மாவட்டம் வறுமைக்குட்பட்ட மாவட்டமாக காணப்படுகின்ற போதும் கல்வியில் சிறந்து விளங்கி வருகின்றமை முல்லைத்தீவு மக்களை மகிழ்ச்சிகொள்ல வைத்துள்ளது.