தேனில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
உடல் ஆரோக்கியத்தில் அதிக நன்மையைக் கொடுக்கும் தேனில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அழற்சி, எதிர்ப்பு, பாக்டீரியா, எதிர்ப்பு பண்புகள் உள்ளது.
இதே போன்று பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், புரதங்கள், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துகள் ஏராளமாக உள்ளன.
இவை இணை்டையும் சேர்த்து சாப்பிட்டால் பல ஆரோக்கிய நன்மைகள் பெறலாம். இங்கு தேனில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையை குறித்து தெரிந்து கொள்வோம்.
நன்மைகள் என்ன?
பேரீச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்து எடையைக் குறைப்பதுடன், செரிமான பிரச்சனையையும் குறைக்கின்றது. தேனில் ஊற வைத்து பேரீச்சம்பழங்களை சாப்பிட்டால் செரிமான சக்தி அதிகரிக்கும்.
மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த பேரீச்சம்பழத்தினை சாப்பிடலாம். இதிலுள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலை தடுப்பதுடன், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக உள்ளவர்கள், இருமல், சளி, காய்ச்சல் பிரச்சனையை சந்திப்பார்கள். தேன் மற்றும் பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து, துத்தநாகம் பல்வேறு வைட்டமின்கள் உள்ளதால் இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
வானிலை மாற்றத்தின் போது ஏற்படும் சளி, இருமல் பிரச்சனையை போக்க தேன், பேரீச்சம்பழம் உதவியாக இருக்கும். இருமல் மற்றும் சளியும் வராமல் இருக்கும். ஆதலால் காலநிலை மாற்றத்தின் போது தேனில் ஊற வைத்த பேரீச்சம்பழத்தை கட்டாயம் எடுத்துக் கொள்ளவும்.
தசைகளை வளர்க்க விரும்புபவர்கள் தேனில் ஊற வைத்த பேரீச்சம்பழத்தினை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இதில் அதிக கலோரிகள் உள்ளதால் தசைகள் வேகமாக வளர்வதற்கு உதவுகின்றது.
தேனில் உள்ள மாய்ஸ்சரைசிங் பண்புகள் சருமத்திற்கு ஆரொக்கியத்தை அளிக்கின்றது. மேலும் சருமத்தை மென்மையாகவும், அழகாகவும் மாற்றுகின்றது.
தேனில் ஏராளமான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், தேனில் ஊற வைத்த பேரீச்சம்பழத்தையும் சேர்த்து சாப்பிடுகையில், உடலில் வீக்கம் குறைந்து, உடல்நலம் மேம்படும்.