வெளிநாட்டில் இலங்கையர் உயிரிழப்பு!

இஸ்ரேலில் வேலைக்காக சென்ற இலங்கை இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.

கண்டியை சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே தனிப்பட்ட காரணங்களுக்காக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞன் 6 மாதங்களுக்கு முன்னர் இஸ்ரேலுக்கு சென்று விவசாய துறையில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், உயிரிழந்த இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருவதாக நிமல் பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.