இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் 78 பட்டப்படிப்புகளில், 13 மட்டுமே கலைப் பிரிவு மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்கள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மொத்த கற்கை நெறிகளில் வெறும் 16% மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
அத்துடன், 8 பட்டங்களை மாத்திரமே வர்த்தக பிரிவு மாணவர்களுக்கு வழங்குகின்றன.
இதன் விளைவாக, பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதிபெறும் 60% க்கும் அதிகமான மாணவர்கள், கிடைக்கக்கூடிய பட்டப்படிப்பு கற்கை நெறிகளில் 27% இற்கு மாத்திரமே போட்டியிட வேண்டும்.
இந்த ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்வதற்கும், பல்கலைக்கழகப் பட்டங்களின் சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்கும், உயர்தரத்தில் STEM கல்வியை ஊக்குவிப்பது மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.