இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தராக பார்க்கப்படுபவர் தான் முகேஷ் அம்பானி.
சமீபத்தில் நடந்த அவரது இளைய மகன்- ஆனந்த் அம்பானி திருமணம் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
உலகமே வியந்து போகும் அளவிற்கு திருமணம் நடந்து முடிந்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரூபாயில் 5000 கோடி வரை செலவு செய்தாகவும் அந்த பணம் அவரின் சொத்து மதிப்பில் வெறும் 0.5% மட்டும் எனவும் கூறப்படுகின்றது.
இவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் அம்பானி குடும்பத்தினர் சாதாரண மக்களைப் போலவே அடிப்படையான மற்றும் பாரம்பரிய உணவு முறையில் தான் சாப்பிடுவார்களாம்.
மேலும், அம்பானி குடும்பத்தினர் பெரும்பாலும் சைவ உணவுகளை அதிகம் உண்பார்களாம். ஏனெனின் அனைவரும் கடுமையான டயட்டில் வாழ்க்கை நடத்தி வருகிறார்களாம்.
எளிமையான உணவு பழக்கம்
அந்த வகையில், முகேஷ் அம்பானி, பருப்பு, ரொட்டி மற்றும் சாதம் போன்ற எளிய உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார். அத்துடன் Thai உணவு வகைகளிலும் விருப்பம் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
அம்பானி குடும்பத்தின் வளர்ச்சிக்கு உணவு பெருபங்காற்றுகின்றது. இப்படி இருக்கும் பொழுது உணவுக்கே இவ்வளவு என்றால் உணவை சமைக்கும் சமையல்காரர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்? என பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது.
அப்படியாயின் அம்பானி வீட்டில் சமைக்கும் சமையல்காரர்களின் சம்பள விவரங்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சமையல்க்காரர் ஒருவரின் சம்பளம்
இந்தியாவிலேயே மிகப்பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானியின் ஆடம்பர இல்லமான ஆன்டிலியாவில் உள்ள சமையல்காரர், மாதச் சம்பளமாக ₹2 லட்சம் பெறுகிறார், அதாவது அவரின் ஆண்டு வருமானமாக 24 லட்சம் பெறுகிறார். இது இந்தியாவின் மிகப்பெரிய கம்பெனிகளில் உயர் பதவிகளில் இருப்பவர்களின் சம்பளத்தை விட மிக அதிகம்.
ஆரோக்கிய காப்பீட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அம்பானி குடும்பத்தினர், சைவ உணவுகளான பருப்பு, சாதம், சப்பாத்தி மற்றும் சப்ஜி, இட்லி-சாம்பாருடன் ஒரு கிளாஸ் பப்பாளிச் சாறு, பப்டி சாட், செவ் பூரி மற்றும் குஜராத்தி உணவுகளை தான் விரும்பி உண்பார்கள்.
பணியாளர்களின் பங்கு விவரங்கள்
இப்படியொரு நிலையில், ஆண்டிலியாவில் சமையல்காரர் மட்டுமல்ல, ஓட்டுநர் கூட 2 லட்சம் சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. ஆண்டிலியாவில் பணிபுரியும் ஊழியர்கள் பலரும் இதேபோல பெரிய தொகையை சம்பளமாக பெறுவதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
இந்த பிரமாண்டமான குடியிருப்பின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளை நிர்வகிப்பதற்காகவே சுமார் 600 பணியாளர்கள் வேலையில் இருக்கிறார்கள். உலகின் இரண்டாவது விலையுயர்ந்த 27 மாடிகளைக் கொண்ட இந்த குடியிருப்பின் உயர் தரத்தையும் தடையற்ற செயல்பாட்டை பராமரிப்பதிலும் இந்த பணியாளர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.