உலக கோடீஸ்வரர் ‘பில் கேட்ஸ்’ விரைவில் இலங்கை வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கேட்ஸ் அறக்கட்டளையின் சுயாதீன ஆலோசகர் சந்தித்த சமரநாயக்க இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கேட்ஸ் அறக்கட்டளை தகவல்
இதன்போது சிறு விவசாயிகளை இலக்காகக் கொண்ட டிஜிட்டல் விவசாய மாற்றத் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் ஊட்டச்சத்து குறைபாடு நெருக்கடியைச் சமாளிக்க வடிவமைக்கப்பட்ட பள்ளிகளுக்கு உணவு வழங்கும் திட்டம் குறித்து இக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (டிபிஐ), கால்நடை வளர்ப்பு மற்றும் காலநிலை முன்முயற்சிகள் மீதான ஒத்துழைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும் இலங்கை அரசாங்கத்திற்கும் கேட்ஸ் அறக்கட்டளைக்கும் இடையிலான பங்காளித்துவத்தை முறைப்படுத்துவதற்கு விரைவில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க கேட்ஸ் அறக்கட்டளையின் தலைமை நம்புவதாக அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.