வெறும் வயிற்றில் கொத்தமல்லி ஜூஸ் குடித்தால் உடலில் நடக்கும் மாற்றம் என்ன?

தற்போது இருக்கும் தவறான பழக்கவழக்கம் காரணமாக நமத உடலில் ஏராளமான நோய்கள் வந்து செல்கிறது. கொத்தமல்லியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு இலையாகும்.

பொதுவாக கொத்தமல்லியின் இலைகள் மற்றும் அதன் உலர்ந்த விதைகளும் தான் உணவுகளில் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. கொத்தமல்லி மிகவும் பழமையான மூலிகையாகும்.

இதில் நார்ச்சத்து, இரும்புச் சத்து, மெக்னீசியம், கால்சியம், வைட்டமின் கே, பாஸ்பரஸ் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளன. இத்தனை குணநலன் கொண்ட கொத்தமல்லி ஜூஸ் காலையில் வெறுவயிற்றில் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

கொத்தமல்லி
நாம் எதையும் கலையில் வெறும் வயிற்றில் உணவாக எடுத்துக்கொள்ளும் போது அதன் சத்துக்கள் அப்படியே உடலுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.அந்த வகையில் காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி ஜீஸ் குடித்தால் பல நன்மைகள் கிடைக்கின்றது.

காலையில் தினமும் 1 கிளாஸ் கொத்தமல்லி ஜூஸ் குடிப்பதால் செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயு மற்றும் வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கும். இந்த இலைகளுக்கு இயற்கையில் குளிர்ச்சி இருப்பதால் வயிறு குளிர்ச்சியடையும்.

இதய ஆரோக்கியம்
கொத்தமல்லியில் உள்ள ஆரோக்கியமான பண்புகள் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. இந்த ஜூஸ் குடிப்பதால் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.

எடை குறைப்பு
கொத்தமல்லி இலையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது முழுக்க முழுக்க எடை குறைப்புக்கு உதவுகின்றன. மேலும், இந்த ஜூஸை வெறும் வயிற்றில் தொடர்ந்து சில நாட்கள் குடித்து வந்தால், உங்கள் எடை விரைவாக குறையும். இதை குடிக்கும் பொத இனிப்பு செர்க்காமல் குடிக்க வேண்டும்.

சரும பளபளப்பு
கொத்தமல்லி இலைகள் உடலுக்கு மட்டுமல்ல சரும அழகிற்கும் உதவுகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி போன்றவை நிறைந்துள்ளது. இவை உடலில் ரத்த ஒட்டத்தை சீராக வைக்கிறது.

எனவே கொத்தமல்லி இலையின் ஜூஸை தினமும் குடித்து வந்தால், முகப்பரு மற்றும் எண்ணெய் சருமம் குணமாவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சரும பிரச்சனையும் குணப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி
நமது உடல் பலவினமாக இருந்தால் எளிதில் நாம் நோய்வாய்படலாம். எனவே தினமும் வெறும் வயிற்றில் 1 கிளாஸ் கொத்தமல்லி ஜூஸ் குடித்து வந்தால், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன.

இதனால் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களுக்கு எதிராக இது போராட உதவுகிறது. மேலும், வயிற்றுப்போக்கு மற்றும் வாயுத்தொல்லையிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. எளிதில் நோய் தொற்றுவதை தடுக்கும்.