இந்த நோய் இருப்பவர்கள் காலிபிளவர் சாப்பிடக் கூடாதம்!

பொதுவாக காய்கறிகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன. அத்துடன் மருந்துகளால் சரிச் செய்ய முடியாத நோய்களை கூட சரியான உணவு பழக்கவழக்கங்களை பின்பற்றுபவர்கள் முறியடிக்கிறார்கள்.

இப்படி ஏகப்பட்ட பலன்கள் இருந்தாலும் குறிப்பிட்ட சில காய்கறிகளை சில நோய்கள் இருப்பவர்கள் மறந்தும் சாப்பிடக் கூடாது. இதன்படி, காலிஃபிளவர் என்பது அனைவராலும் விரும்பப்படும் காய்கறி வகையாக உள்ளது.

இதில், காலிஃபிளவர் குருமா, பக்கோடாக்கள், பிரியாணி உள்ளிட்ட பல வகை உணவுகளை செய்யலாம். இதில் ஏராளமான உடல் ஆரோக்கியம் தரும் சத்துக்களும் உள்ளன. உதாரணமாக காலிஃபிளவர் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி ஆகிய வைட்டமின்களுடன் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.

அந்த வகையில் காலிஃபிளவர் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களையும் அதனை யார் யார் சாப்பிடக் கூடாது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

காலிஃப்ளவரால் உடலுக்கு கிடைக்கும் பலன்கள்

1. காலிஃப்ளவரில் பைட்டோநியூட்ரியண்ட்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை சாப்பிட்டு தூங்கினால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

2. தசைகள் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

3. மற்ற காய்கறிகளை விட காலிஃபிளவரில் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு சத்து குறைவாக இருக்கின்றது. அத்துடன் நார்ச்சத்து அதிகமாகவே இருக்கின்றது. இதனால் மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சினைகள் வருவது குறைவாக இருக்கும்.

4. நீண்ட நேரம் பசியை உணராமல் இருக்க எந்த காய்கறி சாப்பிடலாம் என சிலர் யோசித்துக் கொண்டிருப்பார்கள். அப்படியான டயட்டில் இருப்பவர்கள் காலிஃபிளவர் சாப்பிடலாம். இது பசியை வர விடாமல் தடுக்கும்.

காலிஃபிளவர் சாப்பிடக்கூடாதவர்கள்
1. காலிஃபிளவர் போன்ற கோஸ் வகை காய்கறிகளில் ரஃபினோஸ் என்ற சிறப்பு வகை சர்க்கரை இருக்கும். இது எளிதில் கரையாமல் பெரிய குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் அதை நொதிக்கச் செய்து விடும். அப்படி செய்வதால் வயிற்றில் வாயு அல்லது வீக்கம் பிரச்சினை வரலாம். அத்துடன் மலச்சிக்கல் மற்றும் ஆசிடிட்டி பிரச்சினைகள் கூட ஏற்படலாம்.

2. காலிஃபிளவரில் பியூரின் என்ற கரிம சேர்மம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதன் காரணமாக சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் காலிஃபிளவர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள். அத்துடன் மூட்டு வலி, கீல் வாதம் யூரிக் அமில பிரச்சனை இருப்பவர்களும் தவிர்ப்பது சிறந்தது.

3. அலர்ஜி பிரச்சினையுள்ளவர்கள் காலிஃபிளவர் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால் சில சமயங்களில் தோல் அரிப்பு, வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். சாப்பிடவுடன் பிரச்சினை வராவிட்டாலும் காலப்போக்கில் ஏற்படலாம்.