முல்லைத்தீவில் ஆசிரியர் ஒருவர் தங்கியிருந்த வீடு மற்றும் மோட்டார் சைக்கிள் மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு (05-10-2024) முள்ளியவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து சக ஆசிரியர்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும், ஆசிரியர் தங்கியிருந்த வீடு பகுதியளவில் எரிந்துள்ளது.
இதேவேளை விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளும் பாவிக்க முடியாத வகையில் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளது.
இச் சம்பவம் முள்ளியவளையில் பிரபல பாடசாலையில் கற்பிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரின் வீட்டிலேயே இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த ஆசிரியருக்கும், உயர்தர மாணவன் ஒருவருக்கும் இடையில் முரண்பாடு இருந்து வந்த நிலையில், குறித்த மாணவனை பாடசாலையில் இருந்து இடைநிறுத்தப்பட்ட பின்னர் மீண்டும் மாணவனை பாடசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.