பொதுவாக தற்போது இருக்கும் பிரபலமாக இருக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் மயோனைஸ்.
இதனை சாண்ட்விச், சாலடு, ரோல்ஸ் என பல உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவை மேம்படும்.
அதே நேரம், மயோனைஸ் அதிகப்படியாக சாப்பிடும் பொழுது அது உடல்நல பாதிப்புக்களை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக இதய பிரச்சனைகள் ஏற்படுவதற்கு மயோனைஸ் முக்கிய காரணமாக இருக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
அதிகப்படியான கலோரி, கொழுப்பு உள்ளிட்ட சத்துக்கள மயோனைஸில் இருக்கின்றன. இதனால் மிதமான அளவில் மயோனைஸ் சாப்பிட்டால் பாதிப்புகள் குறைவு.
அந்த வகையில், மயோனைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நோய்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மயோனைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நோய்கள்
1. மயோனைஸை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இரத்தச் சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனின் மயோனைஸில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் அதிகமாக இருக்கின்றது. மாறாக நார்ச்சத்து மற்றும் புரதம் குறைவாக இருக்கின்றது. இது இரத்த சர்க்கரை அளவில் மாற்றத்தை ஏற்படும்.
2. இரத்த சர்க்கரை அளவில் மாற்றம் ஏற்படும் பொழுது சிலருக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். எனவே மயோனைஸ் சாப்பிடும் பொழுது அளவோடு சாப்பிடுவது சிறந்தது.
3. மயோனைஸில் நிறைவுறாத கொழுப்புகள் உள்ளன, அளவோடு சாப்பிடும் போது இதய ஆரோக்கியம் மேம்படும். அதே சமயம் அதிகரிக்கும் பட்சத்தில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். மயோனைஸ் தயாரிக்கும் பொழுது ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான எண்ணெய்களை பயன்படுத்தி இருந்தால் மாத்திரமே நன்மை கிடைக்கும்.