நவராத்திரி காலத்தில் வீட்டில் உள்ள மற்றவர்கள் மட்டுமின்றி, குறிப்பாக பெண்கள் என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று முறை உள்ளது. அவற்றை பின்பற்றி விரதம் இருந்தால் அம்பிகையின் அருள் முழுவதுமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை
இது தீமை அழிக்கப்பட்டு, உலகில் நன்மை நிலை நிறுத்தப்பட்ட நாள் என்பதால் பக்தர்கள் இதை பய பக்தியுடன் விரதம் இருந்து கொண்டாடுகிறார்கள். சிலர் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பகல் முழுவதும் உபவாசமாக இருந்து விரதம் கடைபிடிப்பார்கள். இன்னும் சிலர் கன்னியா பூஜை செய்வதன் அடிப்படையில் ஏழு அல்லது எட்டு நாட்கள் விரதம் இருந்து அம்பிகையை வழிபடுவார்கள். இன்னும் சிலர் 5 அல்லது 3 நாட்கள் கூட விரதம் கடைபிடிப்பதுண்டு. எத்தனை நாட்கள் விரதம் இருந்தாலும், நவராத்திரி விரதம் இருப்பவர்கள் சில முக்கியமான விஷயங்களை செய்தே தீர வேண்டும். இது ஆரோக்கியமான முறையில் விரதம் கடைபிடிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.