ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் கூலி படத்திலும் நடித்து வருகின்றார் ரஜினி. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கூலி படத்திற்கு பிறகு நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினி நடிக்கவுள்ளாராம். இவ்வாறு அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகியிருக்கும் ரஜினி அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. தளபதி படத்திற்கு பிறகு 33 வருடங்கள் கழித்து மீண்டும் ரஜினியும் மணிரத்னமும் இணைய இருப்பதாக தகவல்கள் வருகின்றன
ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம் விரைவில் இணைய இருப்பதாக தகவல்கள் வந்துள்ளதால் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் இதுதான் ஹாட் டாபிக்காக உள்ளது. மேலும் இப்படத்தை பற்றி பல விஷயங்கள் இணையத்தில் வெளியாகிக்கொண்டு இருக்கின்றது. ஆனால் இதெல்லாம் எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. அதாவது ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிப்பதாகவும், இப்படம் கமலின் நாயகன் படம் போல ஒரு க்ளாஸான படமாக உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. நாயகன் போல ஒரு கதாபாத்திரத்தில் தான் ரஜினி இப்படத்தில் ஏற்று நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால் இத்தகவல் எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை
தற்போது ரஜினி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி ஓய்வில் இருக்கின்றார். இன்னும் இரண்டு வாரங்களில் ரஜினி கூலி படப்பிடிப்பில் இணையவுள்ளார். அதனை தொடர்ந்து நெல்சன் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவாக இருக்கும் ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளது. ஜெயிலர் 2 அறிவிப்பு வெளியான பிறகு டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னம் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவாகும் படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரஜினி மற்றும் மணிரத்னம் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் சொல்லப்படுகின்றது
வேட்டையன் படத்தை தொடர்ந்து ரஜினி லோகேஷ் கனகராஜின் கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படம் அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. அநேகமாக இப்படம் அடுத்தாண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படங்களை தொடர்ந்து ரஜினி மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இவ்வாறு அடுத்தடுத்து ரஜினியின் லைன் அப்பில் இருக்கும் படங்களின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது