தோசை எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவு என்று தான் சொல்ல வேண்டும்.இதை சட்னி சாம்பார் பொடி நெய் முட்டை என நிறைய உணவுடன் வைத்து சாப்பிடலாம்.வழக்கமாக தோசைகளை சாப்பிடுவதைவிட வித்யாசமான தோசைகளை ருசிப்பது எல்லோருக்கும் பிடிக்கும்.
அதிலும் பல வகையான தோசைகள் உள்ளன. ராகி தோசை, கம்பு தோசை, சிறுதானிய தோசை, நவதானிய தோசை, கோதுமை தோசை என தானியங்கள் மட்டுமின்றி, தக்காளி தோசை, சுரைக்காய் தோசை, பாலக் தோசை, உள்ளது.
அந்த வகையில் வெள்ளரி தோசையும் தற்போது பிரபலமாகி வருகின்றது. இந்த தோசை செய்வதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதும். வெள்ளரிக்காய் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெள்ளரி பிஞ்சு – இரண்டு கப் (நறுக்கியது)
தேங்காய் துருவல் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 2
சீரகம் – ஒரு ஸ்பூன்
உப்பு – சிறிதளவு
தோசை மாவு – ஒரு கப்
செய்யும் முறை
ஒரு மிக்ஸி ஜாரில் வெள்ளரி பிஞ்சு, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி, உப்பு என சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். அதை இட்லி மாவில் கலந்துகொள்ளவேண்டும்.
சிறிது நேரம் மாவு செட்டானவுடன், அதை தோசைக்கல்லில் தோசைகளாக ஊற்றி எடுக்கவேண்டும். இதற்கு தொட்டுக்கொள்ள சாம்பார் மற்றும் சட்னி சேர்த்து சாப்பிடலாம்.
வெள்ளரிக்காயின் நன்மைகள்
வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு.
இவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல்இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.
செரிமானம் தீவிரமாகும், பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் விசேச ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது.
நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி.
மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும் வெள்ளரிக்காய் வழங்கும்.நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது நல்லதல்ல.