விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக தற்போது சிறகடிக்க ஆசை இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அதில் முத்து – மீனாவாக நடிக்கும் ஜோடியில் நடிப்பு தான்.
முத்துவாக நடிக்கும் வெற்றி வசந்துக்கு தற்போது அதிகம் ரசிகர்கள் கிடைத்து இருக்கிறார்கள். சீரியலில் அவரது எதார்த்த நடிப்புக்கு நல்ல பாராட்டு கிடைத்து வருகிறது.
திருமணம்
தற்போது வெற்றி வசந்த் திருமணம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. விஜய் டிவி பொன்னி சீரியல் ஹீரோயின் வைஷ்ணவியை தான் வெற்றி வசந்த் திருமணம் செய்கிறார்.
அவர்களுக்கு இந்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது. அதை வீடியோ வெளியிட்டு வெற்றி வசந்த் அறிவித்து இருக்கிறார்.