திடீர் உடல்நிலை பாதிப்பால் அவதியுற்ற ரவீந்தர்

பிக்பாஸ் சீசன் 8-ன் முக்கிய போட்டியாளரான ரவீந்தர் உடல்நல பாதிப்பால் அவஸ்தைப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 8
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சி கடந்த 7 சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்து விட்டு தற்போது எட்டாவது சீசனில் உள்நுழைந்துள்ளது.

இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆண்டவராக இருந்து தொகுத்து வழங்குகிறார்.

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பிரமாண்டமாக ஆரம்பமாகிய பிக்பாஸ் சீசன் 8 இரண்டு நாட்களை நிறைவு செய்துள்ளது.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளே வந்த போட்டியாளர்களில் சாச்சனா கடந்த 24 மணி நேரத்தில் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார்.

உடல்நல பாதிப்பால் அவஸ்தை
இதனை தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷனில், நடிகர் ரஞ்சித், மேடை பேச்சாளர் முத்துகுமரன், தொகுப்பாளர் ஜாக்குலின், சௌந்தர்யா, தயாரிப்பாளர் ரவீந்தர், சீரியல் நடிகர் அருண் பிரசாத் ஆகிய ஆறு போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றன. இந்த சமயத்தில் பிக்பாஸ் போட்டியாளர்- ரவீந்தருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், நேற்று மாலை கேப்டன் யார் என்ற தேர்வு நடைபெற்றது. அதில் பெண்கள் அணியில் இருந்து தர்ஷிகா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். இதற்காக நடத்தப்பட்ட டாஸ்க்கில், ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், ரவீந்திரன் சந்திரசேகரும் காயமடைந்தார்.

இதனால் அவருக்கு உடநல பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்ற போட்டியாளர்கள் அவரை கவனித்து வருகின்றனர்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் இப்படியே ரவீந்தர் உடல் நலக் குறைவால் அவஸ்தைப்பட்டால் வீட்டிலிருந்து வெளியேற்றப்படலாம் என ரசிகர்கள் எதிர்வு கூறி வருகின்றனர்.