வேட்டையன் படம் குறித்து தனுஷ் வெளியிட்டுள்ள பதிவு!

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. அதன் பிறகு, தற்போது TJ ஞானவேல் இயக்கத்தில் பிரமாண்டமாக இன்று வெளியான வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புடன் உருவான இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டகுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இன்று வெளியான வேட்டையன் படம் தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக, படத்தில் பகத் பாசில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் பதிவு
இந்நிலையில், நடிகர் தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வேட்டையன் படம் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.