காலை வேளையில் என்ன உணவுகள் எடுத்துக் கொள்ளலாம்

ஆரோக்கியமாக இருப்பதற்கு காலை வேளையில் என்ன உணவுகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக புதிதாக தொடங்கும் நாளில் நாம் நாள்முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு காலை உணவு மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.

அதிலும் சில உணவுகளை நாம் காலையில் எடுத்துக் கொள்வதால் சுறுசுறுப்புடனும், அதிக ஆற்றலுடனும் அன்றைய வேலையை செய்யலாம்.

காலை நேரத்தில் உடலானது சுமார் 8 மணி நேர ஓய்வுக்குப்பிறகு மீண்டும் புத்துணர்ச்சியுடன் செயல்பட தொடங்கும். உடம்பிற்கு போதுமான ஆற்றல் தேவைப்படுகின்றது. ஆனால் காலை உணவில் உணவில் எண்ணெய் பலகாரங்கள், காரம் ஆகியவை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்த வகையில் காலை வேளையில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

காலையில் சாப்பிட வேண்டிய உணவுகள்
நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த ஓட்ஸ் காலையில் சாப்பிட வேண்டிய சத்தான உணவாகும். ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதுடன், நீண்ட நேரம் பசியை தடுக்கின்றது. கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்தும் ஓட்ஸை, பால் அல்லது தண்ணீரில் கலந்து சாப்பிடலாம். இதனுடன் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு மற்றும் பெர்ரி போன்ற பழங்களில் வைட்டமின், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ள நிலையில், இதனை காலை உணவில் எடுத்துக் கொள்வது ஆற்றல் அழிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கின்றது.

கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த தயிரை காலை உணவில் எடுத்துக்கொண்டால் நன்மை அளிப்பதுடன், செரிமானத்திற்கும் உதவியாக இருக்கும்.

புரதத்தின் சிறந்த மூலமாக இருக்கும் முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வது மிகுந்த நன்மை அளிக்கும். வேக வைத்தோ, ஆம்லேட் செய்தோ, காய்கறி பொறியலுடன் சேர்த்து சாப்பிடலாம்.

பாதாம், அக்ரூட் பருப்புகள், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற கொட்டைகள் மற்றும் விதைகள் காலை உணவுக்கு சிறந்ததாகும். ஏனெனில் இதில் ஆரோக்கியமான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகின்றது.