தந்தையை கொலை செய்த மகன் கைது!

கனடாவில்(Canada) தந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் கடந்த 05 ஆம் திகதி ரொறன்ரோவின் லோரன்ஸ் அவென்யூ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 82 வயதான ஹென்றி ஜோசப் என்பவரே படுகொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், உயிரிழந்தவரின் மகனான அண்ட்று ஜோசப் என்ற 36 வயதான நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன், குறித்த நபரின் கொலை பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு காவல்துறையினர் அப்பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.