செட்டிநாடு பாணியில் அசத்தல் காரசட்னி

பொதுவாகவே இந்தியர்களின் உணவுமுறைப்படி காலையில் இட்லி, தோசைக்கு தொட்டுக்க சட்னி செய்யும் வழக்கம் காணப்படுகின்றது.

சட்னி என்றாலே பெரும்பாலும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி இவை இரண்டில் ஒன்றைத்தான் பெரும்பாலும் செய்வார்கள்.

சற்று வித்தியாசமான முறையில் செட்டிநாடு பாணியில் அட்டகாசமான சுவையில் காரசட்னி எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய், கடலை எண்ணெய் – 3 தே.கரண்டி

வெங்காயம் – 2 (நறுக்கியது)

தக்காளி – 2 (நறுக்கியது)

பூண்டு – 6 பற்கள்

காய்ந்த சிவப்பு மிளகாய் – 6

புளி- சிறிதளவு

வெல்லம் – 1 தே.கரண்டி

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையானவை

நல்லெண்ணெய் – 1 தே.கரண்டி

கடுகு – தேவையான அளவு

உளுந்து – தேவையான அளவு

கடலைப்பருப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை – பெருங்காயம் சிறிதளவு

செய்முறை
முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூமபனதும், நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டைச் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் மிளகாய், புளி மற்றும் வெல்லம் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து தேவையானளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் 3 விசில் வரும் வரையில் வேகவிட வேண்டும்.

பின்னர் அதனை இறக்கி ஆறவிட்டு, உப்பு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அரைத்து வைத்த சட்னியை இதில் சேர்த்து சிறிது பெருங்காயம் போட்டு தாளித்து இறக்கிளால் அவ்வளவு தான் அருமையான சுவையில் காரசட்னி தயார்.