கனடாவில் ஒருவரிடமிருந்து பணம் கொள்ளை!

கனடாவில் ஒருவரிடமிருந்து ஒரு லட்சம் டொலர் கொள்ளையிடப்பட்டுள்ளது.

வாகனமொன்றில் வைத்து இவ்வாறு குறித்த நபரிடம் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

மொஹமட் யாகுபி என்ற நபரின் பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் பணத்தை இழந்ததன் மூலம் தமது வாழ்க்கையையே இழக்க நேரிட்டுள்ளது என குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

100000 முதல் 110000 டொலர்கள் வரையில் காரில் பணம் வைத்திருந்ததாகவும் அதனை களவாடிச் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வாகனத்தில் மறைத்து பணம் கொள்ளையிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெட்டி நிறைய பணம் கொண்டு வருதனை கண்காணித்து இந்த கொள்ளை இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.