இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது யார்?

மிகப்பெரிய கொண்டாட்டங்கள் மற்றும் அறிமுகத்துடன் கடந்த 6 ஆம் திகதி பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஆரம்பமானது.

நிகழ்ச்சியின் பிரம்மாண்ட தொடக்க விழ்வில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் அவர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சிறப்பாக கொண்டு செல்வார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 8 ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில், நேற்றை தினம் விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் ஒரு வாரம் எப்படி போனது என கேள்வி எழுப்பி காரசாரமாக யாரும் எதிர்பார்க்காத வகையில் தொகுத்து வழங்கினார்.

நேருக்கு நேர் கேள்வி பதில் என ஒவ்வொருவரையும் வெளுத்து வாங்கியதால் பிக்பாஸ் ரசினர்களுக்கு விஜய் சேதுபதியின் மீது இருக்கும் நம்பிக்கையும் மரியாதையும் இன்னும் உயர்ந்து விட்டது.

இன்றைய தினம் ஒரு போட்டியாளர் வெளிறேவுள்ள நிலையில் பலரும் அது ரவீந்தராக இருக்கும் என முன்னரே கணித்திருந்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார் என்ற பரபரப்பு Promo தற்போது வெளியாகியிருக்கின்றது.