சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தன்னுடைய 44வது படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார் சூர்யா. இந்த நிலையில் அடுத்தபடியாக வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ படத்தில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூர்யாவின் 45வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க இருப்பதாக செய்தி வெளியானது.
இதற்காக அவர் லொகேஷன் பார்த்துவரும் புகைப்படத்தையும் ஆர்ஜே பாலாஜி பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், ஆர்ஜே பாலாஜி – சூர்யா படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இப்படத்திற்கான பூஜை இன்று (அக்.,14) நடைபெற்றது. படப்பிடிப்பு நவம்பரில் துவங்குகிறது.
ஆர்ஜே பாலாஜி ஏற்கனவே, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகிறது. இப்படத்தை அடுத்தாண்டு இரண்டாம் பாதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது