செவ்வாய் கிழமையில் ஏன் வீட்டை சுத்தம் செய்யக் கூடாது!

பொதுவாக ஜோதிட மற்றும் இந்து சாஸ்திரத்தின் பிரகாரம் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வீடு துடைத்து சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.

இவ்வாறு செய்வதால், வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சம் வீட்டைவிட்டு வெளியே போய்விடும் என்ற நம்பிக்கை பலரிடமும் காணப்படுகின்றது.

இதில் எந்தளவுக்கு உண்மையிருக்கின்றது. நமது முன்னோர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்ய கூடாது என எதற்காக கூறிவைத்தார்கள் என்பது குறித்து முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் வீட்டை துடைத்து சுத்தம் செய்தால் லட்சுமி கடாட்சம் இல்லாமல் பொய்விடுமா என்ற சந்தேகம் பலரிடமும் காணப்படுகின்றது. ஆனால் இதில் நிச்சயம் எந்த உண்மையம் இல்லை.

சாஸ்திரங்களின் பிரகாரம் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகள் மிகவும் மங்களகரமான நாட்களாக பார்க்கப்படுகின்றது.

இந்த நாட்களில் வீட்டை சுத்தம் செய்வது அசும் என்று அர்த்தம் கிடையாது. நமது முன்னோர்கள் இந்த நாட்களை பூஜைக்கு உகந்த நாட்களாக வரையறுத்தார்கள்.

இந்த தினத்தில் வீட்டை முழுமையாக சுத்தம் செய்து பின்னர் பூஜை செய்வதற்கு நேரம் போதாது எனவே தான் முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து வேலையை எளிமையாக்கிக்கொண்டால் பூஜை செய்யும் நாட்களில் முழு கவனத்துடன் வழிபாட்டில் ஈடுப்பட முடியும்.

செவ்வாய் வெள்ளி கிழைகளில் வீட்டை துடைத்து சுத்தம் செய்வதால் உடல் சோர்வாகிவிடும் இதன் பின்னர் பூஜையில் முழுமையாக ஈடுப்பாடு காட்ட முடியாத நிலை உருவாகும். இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த நாட்களில் சுத்தம் செய்ய கூடாது என கூறப்பட்டது.

இதனை தற்காலத்தில் பலரும் தவறாக புரிந்துக்கொண்டு இந்த நாட்களில் சுத்தம் செய்வதையே கூடாது என தவிர்த்து வருகின்றனர்.

வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் காலை 6:00 மணிக்கு முன்பாகவே வீட்டை துடைத்து பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொண்மால் எளிமையாக இருக்கும். ஆனால் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப பூஜை செய்யலாம்.

அப்போதே வீட்டை சுத்தம் செய்து பூஜை செய்தால் தான் உங்களுக்கு திருப்தியாக இருக்கும் என்றால் வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் கூட சுத்தம் செய்வதில் எந்த பாதக விளைவும் ஏற்படாது.