மனோஜ், ரோகினியை வெளுத்து வாங்கிய மீனா!

சிறகடிக்க ஆசை சீரியலில் தன்னை பரீட்சை எழுத வைத்த முத்துவின் காலில் விழுந்து சத்யா மன்னிப்பு கேட்டுள்ளார்.

சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

ரோகினி தனது தவறை மறைப்பதற்கு மீனா மற்றும் முத்துவிற்கு கெடுதல் செய்து வருகின்றார். வீட்டில் மீனாவை விஜயா கொடுமை செய்து வருகின்றார்.

மீனாவின் சொந்தக்காரர்கள் வந்த நிலையில் விஜயா அங்கு வந்து சண்டையிட்டு வெளியே அனுப்பியுள்ளார். இதனை தனது தோழிகளிடம் வந்து கூறிய நிலையில் அவர்கள் மீனாவிடம் அனைவரையும் அடித்து துவைக்க கூறியுள்ளார்.

இதனால் மீனா தன்னை அதிகாரம் செய்த மனோஜையும், அவருக்கு சப்போட் செய்த ரோகினியையும் அடித்து துவைத்துள்ளார். ஆனால் இது உண்மை என்று பார்வையாளர்கள் நினைத்த தருணத்தில், பின்பு தான் மீனாவின் கனவு என்று தெரிகின்றது.