தோசை மாவு சேர்த்து சட்னி செய்யலாமா?

பொதுவாகவே தக்காளி சட்னி, புதினா சட்னி, தேங்காய் சட்னி மற்றும் மிளயாய் சட்னி என பல்வேறு வயைில் சட்னி தயாரிக்கலாம் என்பது பலரும் அறிந்த விடயம் தான்.

ஆனால் தோசை மாவு சேர்த்து அசத்தல் சுவையில் சட்னி செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? எப்படி செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சீரகம் – ¼ தே.கரண்டி

சின்ன வெங்காயம் – 20

பூண்டு – 5 பல்

தக்காளி – 2

வரமிளகாய் – 3

காஷ்மீர் மிளகாய் – 3

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

புளித்த மாவு – ½ தே.கரண்டி

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையானவை
எண்ணெய் – சிறிதளவு

கடுகு – ¼ தே.கரண்டி

கடலைப் பருப்பு – ¼ தே.கரண்டி

உளுந்தம் பருப்பு – ¼ தே.கரண்டி

கருவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை
முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை சுத்தம் செய்து தோல் நீக்கி வைத்து கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் நன்றாக பழுத்த இரண்டு தக்காளியை அடுத்து பொடியாக நறுக்கிவைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து சீரகம், தோல் நீக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, நறுக்கிய தக்காளி ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு,அதனுடன் வரமிளகாய், காஷ்மீர் மிளகாய், நெல்லிக்காய் அளவு புளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் சேர்த்து காய விட்டு, கடுகு சேர்த்து பொரிய விட வேண்டும்.

அதனையடுத்து ஒரு கொத்து பச்சை கருவேப்பிலை மற்றும் உளுந்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அரைத்து வைத்த கலவையை இதனுடன் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக கொதிக்க விடவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் அரை கரண்டி தோசை மாவை எடுத்து ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ள வேண்டும்.

அதனையடுத்து வதக்கிய பொருட்களுடன் தோசைமாவு கலவையையும் நேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறுதியில் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் சட்னி தயார்.