இந்த திகதிகளில் பிறந்தவர்களுக்கு தலைமைத்துவ குணம் கூடவே பிறந்ததாம்

பொதுவாகவே ஒருவர் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் ஆகியன அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை பண்புகளில் ஆதிக்கம் செலுத்தும்.

அதே போன்று எண்கணித சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் திகதிக்கும் அவர்களின் ஆளுமை மற்றும் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களுடன் ஒப்பிடும் போது அதிக ஆளும் தன்மை அதாவது சிறந்த தலைமைத்துவ பண்புகளை கொண்டிருப்பார்கள்.

அப்படி பிறப்பிலேயே தலைத்துவ பண்புகளுடன் பிறப்பெடுத்தவர்கள் எந்தெந்த திகதிகளில் பிறந்தவர்கள் அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்கள் எப்படியிருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒருவரின் பிறந்த திகதியை அடிப்பமையாக வைத்தே அவர்களுக்கான பிறப்பு எண்கள் கண்டறியப்படுகின்றது. உதாரணமாக, ஒருவரின் பிறந்த திகதி 25 ஆக இருந்தால் அவரின் பிறந்தநாளின் கூட்டுத்தொகை 7 ஆகும். இதுவே இவரின் பிறப்பு எண் ஆக கருதப்படுகின்றது.

1, 10, 19, 28 ஆகிய திகதிகள்
அந்தவகையில்1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் சூரிய பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் அதனால் அவர்களிடம் வலுவான தனித்துவ உணர்வு, தலைமைத்துவ குணங்கள் என்பன நிச்சயம் அமைந்திருக்கும்.

இந்த எண்களில் பிறந்தவர்கள் தெளிவான லட்சிய பாதையை கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் இனம் புரியாத வசீகர தன்மை காணப்படும். இதனால் இவர்கள் மற்றவர்ளால் எளிமையாக ஈர்க்கப்படுகின்றார்கள்.

இந்த திகதிகளில் எந்த மாதத்தில் பிறந்திருந்தாலும் இவர்களுக்கு மற்றவர்களை அடக்கியாளும் குணம் அயல்பாகவே அடைந்திருகக்கும்.
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் ஒரு விடயத்தில் முடிவெடுத்துவிட்டால் இதனை யாருக்காகவும், எதற்காகவும் மாற்றிக்கொள்ளமாட்டார்கள்.

இலக்கை அடைய வேண்டும் என்பதற்கான கடினமாக உழைக்கும் ஆற்றல் இவர்களுக்கு கட்டாயம் இருக்கும்.

அதனால் இவர்களின் அனைத்து காரியங்களும் வெற்றியடையும். பிரச்சனைகளை தீர்ப்பதில் திறமையானவர்களாக இருப்பார்கள்.
வணிகம், மேலாண்மை, அரசியல், சுயதொழில் உட்பட அனைத்திலும் தலைமை பதவிகளில் இருக்கும் வாய்ப்பை இந்த திகதிகளில் பிறந்தவர்கள் பெறுவார்கள்.

இவர்கள் சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். தங்கள் சுதந்திரத்தை மதிக்கும் நபரை மட்டுமே வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க விரும்புவார்கள்.

இவர்கள் மற்றவர்களுடன் எவ்வளவு நெருங்கி பழகினாலும் சுயநல குணமும் தலைமைத்துவ குணமும் இவர்களை விட்டு விலகாமல் பார்த்துக்கொள்வார்கள்.

இவர்கள் தங்களின் அடக்கியாளும் குணத்தை தொழில் விடயங்களில் மட்டும் பயன்படுத்தாமல் எல்ல உறவுகளிலும் பிரையோகிக்கும் தன்மையை கொண்டிருப்பார்கள். அதனால் வாழ்வில் சில சமயம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

இவர்கள் வாழ்வில் வெற்றியடையும் வாய்ப்பை அதிகம் கொண்டிருப்பார்கள் இருப்பினும், வெற்றியடைய பல்வேறு போராட்டங்களை சந்திக்க நேரிடும்.