கனடாவில் கடந்த செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்கம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி கனடாவின் பணவீக்க விதமானது 1.6 வீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவலை வெளியிட்டு வலியுள்ளது.
எதிர்வரும் சில மாதங்களுக்கு கனடாவின் பண வீக்க வீதமானது இரண்டு வீதத்திற்கு குறைவாக காணப்படும் என பொருளியல் நிபுணர் ட்யூ நக்கி என்று தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி நாட்டின் பணவீக்க வீதத்தை இரண்டு வீதமாக பேணும் இலக்கினை கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
எதிர்வரும் 23 ஆம் திகதி வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கி முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளது. பணவீக்கத்தின் நிலையை அடிப்படையாகக் கொண்டு வட்டி வீதம் நிர்ணயம் செய்யப்படுகின்றது.
கடந்த செப்டம்பர் மாதம் பணவீக்கம் குறைவடைந்தமைக்கு எரிபொருள் விலை வீழ்ச்சி முக்கிய ஏதுவாக அமைந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, வாடகை தொகைகள் அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் உணவுப் பொருட்களுக்கான விலைகள் தொடர்ந்தும் அதிகரிப்பினை பதிவு செய்து வருவதாக கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டி உள்ளது.