கல்லீரலை குறி வைத்து தாக்கும் வைரஸ் தொற்று

தற்போது இருக்கும் தவறான வாழ்க்கை முறையால் நாம் நினைத்து பார்க்க முடியாதளவு நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

இந்த வரிசையில், மனிதர்களின் கல்லீரலை தாக்கும் நோய்களின் ஒன்றாக ஹெபடைடிஸ் Hepatitis B பார்க்கப்படுகின்றது.

இந்த ஹெபடைடிஸ் நோய் தொற்று ஹெபடைடிஸ் பி எனப்படும் வைரஸால் ஏற்படுகின்றது. இதனை சாதாரணமான நோய் தொற்று என நினைத்து கொள்ளக்கூடாது. ஏனெனின் இந்த வைரஸ் நாளடைவில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

ஹெபடைடிஸ் பி தொற்று இருப்பதனை சில அறிகுறிகளை வைத்து கண்டுக் கொள்ளலாம். அப்படியான அறிகுறிகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

ஹெபடைடிஸ் பி (hepatitis-b)

ஹெபடைடிஸ் பி என்பது கல்லீரலை பாதிக்கும் மிக மோசமான நோய்த் தொற்றுக்களில் ஒன்று. இந்த வைரஸ் கல்லீரலில் முற்றாக பாதிப்பை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தும்.

ஹெபடைடிஸ் என்ற வைரஸ் தொற்று ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி என்று அழைக்கப்படுகின்றது. அதிலுள்ள ஹெபடைடிஸ் ஏ – யை விட ஹெபடைடிஸ் பி மிகவும் ஆபத்தான நிலையாகும்.

ஏனெனின் இந்த வைரஸ் கல்லீரலில் நேரடியான பாதிப்பை எற்படும். இது தீவிர நிலையில் இருக்கும் பொழுது கல்லீரலில் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம்.

ஹெபடைடிஸ் பி- யின் நிலைகள் (stages of hepatitis B)
ஹைபடைடிஸ் பி – யில் இரண்டு நிலைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

1. ஆரம்ப நிலை (acute)

2. நாள்பட்ட நிலை (chronic)

1. ஆரம்ப நிலை (acute)
ஆரம்ப நிலை (acute) என்பது, ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்று உடலில் பரவத் தொடங்கும் காலகட்டத்தை குறிக்கின்றது. அதிலும் குறிப்பாக இந்த தொற்று இளம் வயதில் இருப்பவர்களுக்கு அதிகமாக ஏற்படும். ஒரு கட்டத்திற்கு பின்னர் வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதை ஒரு சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம்.

2. நாள்பட்ட நிலை (chronic)
நாள்பட்ட நிலை (chronic) என்பது ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்று ஏற்பட்டு ஆறு மாதங்களின் பின்னர் சிகிச்சை பெறாமல் இருக்கும் நிலையை குறிக்கும். சில சமயங்களில் இந்த தொற்றை குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

நாள்பட்ட நிலை (chronic) தொற்று ஏற்படும் போது கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் சிரோசிஸ் நோய்களை உண்டாக்கும். இரண்டு நிலைகளையும் ஆரம்ப காலங்களிலேயே கண்டறிந்தால் கல்லீரல் புற்றுநோய் தீவிரமடையும் முன்னர் சிகிச்சை கொடுக்கலாம்.

ஹெபடைடிஸ் பி எப்படி பரவும்?
1. ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஒன்றைய அடிப்படையாக வைத்தே இந்த தொற்று இன்னொருவருக்கு பரவும். அதாவது சிலருக்கு ஒருவரிடம் இருக்கும் ரத்தம் மூலம் மற்றவர்களுக்கு உடல் திரவம் வழியாக பரவும்.

2. முன்னரே ஹெபடைடிஸ் தொற்று ஒருவர் பயன்படுத்திய ஊசிகள், ரேசர் போன்றவற்றிலிருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

3. கர்ப்பிணி பெண்களுக்கு இந்த ஹெபடைடிஸ் தொற்று இருந்தால் அது வயிற்றுள்ள குழந்தையை பாதிக்கும். அதே சமயம் பிறக்கும் குழந்தைக்கு இந்த தொற்று இருக்கும்.

4. ரத்தப் பரிமாற்றத்தின் போது இந்த ஹெபடைடிஸ் பி இருப்பவர் ஒருவர் ரத்தம் கொடுத்தால் அந்த நோய் ரத்தத்தை ஏற்றும் நபருக்கு ஏற்படும்.

5. தொற்று பாதிக்கப்பட்ட ஒருவருக்கு டாட்டூ போட்ட பின்னர் அதே ஊசியில் மற்றவர்கள் டாட்டூ போட்டுக் கொண்டால் அந்த தொற்று மற்றவர்களுக்கு வேகமாக பரவும்.

​ஹெபடைடிஸ் பி தொற்றின் அறிகுறிகள்
ஆரம்ப கட்டத்தில் ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதை அறிகுறிகள் வைத்து கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். ஆனால் சில சமயங்களில் சில அறிகுறிகள் அடிக்கடி வந்து கொண்டு இருக்கும் பட்சத்தில் உரிய மருத்துவரை பார்ப்பது சிறந்தது.
1. சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது அல்லது சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியேறுதல்.

2. அடிக்கடி தலைவலி ஏற்படல்

3. சிலருக்கு காரணமே இல்லாமல் வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படலாம்.

4. சருமத்தில் ஒரு வகையான அரிப்பு ஏற்படல்.

5. அளவுக்கு அதிகமான உடல் சோர்வு ஏற்படல்.

6. காரணமே இல்லாமல் பசியின்மை ஏற்படல்

7. சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்திற்கு மாறுதல்

​ஹெபடைடிஸ் பி தொற்று சோதனைகள்
மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் உங்களுக்கு இருப்பது போன்று தோன்றினால் ஒரு சில சோதனைகள் மூலம் பரிசோதித்து பார்க்கலாம்.

1. பக்கத்திலுள்ள மருந்தகங்களில் ரத்தப் பரிசோதனை செய்யலாம். இதன் மூலம் ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்று இருப்பதை கண்டறியலாம்.

2. அல்ட்ரா சவுண்ட் சோதனை – அடிவயிற்றுப் பகுதியில் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது. இதுவும் தொற்று இருப்பதை உறுதிச் செய்ய துணையாக இருக்கும்.

ஹெபடைடிஸ் பி சிகிச்சை முறைகள்
ஹெபடைடிஸ் வகை நோய்கள் வராமல் இருப்பதற்காகவும் அதன் வீரியத்தை குறைப்பதற்காகவும் ஹெபடைடிஸ் பி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இது மருத்துவரின் பரிந்துரைக்கு அமைய முயற்சிக்கலாம்.

பரிசோதனைகளின் மூலம் உங்களுக்கு தொற்று இருப்பது உறுதியானால் அரச மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளலாம். வருடத்தில் எல்லா நாட்களிலும் மருத்துவமனையில் இருக்கும்.

உடலுக்கு ஊட்டச்சத்தை தரும் உணவுகளை சாப்பிட வேண்டும். அத்துடன் உடற்பயிற்சிகள் செய்து வந்தால் தொற்றை கட்டுபாட்டில் வைக்கலாம்.

மது அருந்தல் மற்றும் புகைப்பழக்கம் இருந்தால் அதனை முற்றிலும் கை விட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் உங்களுக்கு தொற்றின் பாதிப்பு அதிகமாகும்.

ஹெபடைடிஸ் பி போன்ற கல்லீரலை பாதிக்கும் வைரஸ் தொற்றுக்களின் தாக்கத்தை ஆங்கில மருத்துவத்தினால் கட்டுக்குள் வைக்கலாம். தாமதிக்கலாம் சிகிச்சை பெறுவதால் நீங்கள் நீண்ட நாள் உயிர் வாழ முடியும்.
ஹெபடைடிஸ் B வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் 90% க்கும் அதிகமானவர்கள் ஒரு வருடத்தில் இயற்கையாக குணமடைவார்களாம்.

ஹெபடைடிஸ் B தடுப்பு
ஹெபடைடிஸ் B தடுப்பூசியை குழந்தைகள் பிறந்து 24 மணி நேரத்திற்குள் கொடுக்கப்பட வேண்டும் என WHO பரிந்துரைக்கிறது, முதன்மைத் தொடரை முடிக்க 2 அல்லது 3 டோஸ்களைப் பின்பற்ற வேண்டும்.

முழுமையான தடுப்பூசி தொடர் 95% க்கும் அதிகமான பிறந்த குழந்தைகள், குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு கொடுக்கப்பட்டுள்ளன. குழந்தையின் கல்லீரல் பாதுகாப்புக்கான ஆன்டிபாடி அளவை இந்த தடுபூசிகள் துண்டுகின்றன. இதன் வீரியம் குறைந்தது 20 ஆண்டுகள் நீடிக்கும் என கூறப்படுகின்றது. சில சமயங்களில் குறிப்பிட்ட ஒரு நபருக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

சாப்பிட வேண்டிய உணவுகள்
1. ஹெபடைடிஸ் பாதிப்பு இருப்பதை கண்டறிந்த பின்னர் மருந்துகளை எடுத்து கொண்டு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். நீங்கள் சாப்பிடும் உணவுகள் தான் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்.

2. முழு தானியங்களை நிறைய சாப்பிட வேண்டும். அதாவது, பிரவுன் ரைஸ், முழு தானிய கஞ்சி உள்ளிட்ட உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஓட்ஸ், ஓட்மீல்ஸ், கார்ன் ஆகிய உணவுகளையும் சாப்பிடலாம்.

3. பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதிலிருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். இதனால் நீங்கள் தொற்றிலிருந்து சீக்கிரம் வெளியில் வரலாம். அத்துடன் கல்லீரல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

4. ஆலிவ் எண்ணெய், கனோலா எண்ணெய் ஆகிய உடலுக்கு தேவையான எண்ணெய்களை உணவில் சேர்த்து கொள்ளலாம். ஹெபடைடிஸ் நோயாளிகள் அதிகம் சேர்த்து கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

5. கொழுப்பு குறைந்த உணவுகளான பால் பொருட்களை அதிகம் சாப்பிடலாம். அதே சமயம் இறைச்சி வகைகள் சாப்பிடுவதை குறைத்து முட்டையை சாப்பிடலாம். சோயா கலந்த உணவுகளை சாப்பிடலாம்.