பிக்பாஸ் ஜனனி மார்ட்ன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பிக்பாஸ் ஜனனி
பிக் பாஸ் சீசன் 6 ல் முக்கிய போட்டியாளராக இலங்கை சார்பாக பங்கேற்றவர் தான் தொகுப்பாளர் ஜனனி.
இவர் இலங்கையில் இருக்கும் ஒரு பிரபல தொலைக்காட்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் அறிமுகமானவர்.
ஜனனியின் குழந்தைத்தனமாக ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமடைய வைத்தது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சினிமா வாய்ப்பை பெற்றுக் கொண்டார்.
அந்த வகையில்,விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்துடன், தற்போது விஜய் சேதுபதி, மிஸ்கின் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ஜனனி மார்டன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.