ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் மூன்று வேடங்களில் நடித்து வரும் படம் ‘குட் பேட் அக்லி’. திரிஷா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் முதல் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘வீர தீர சூரன்’ படத்தையும் வருகிற பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள். அதனால் 2025 பொங்கல் தினத்தில் அஜித்தும், விக்ரமும் நேருக்கு நேர் மோதுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.