எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் நடிகை கெளதமி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே நடிகை கவுதமிக்கு, 150 ஏக்கர் நிலம் வாங்கித் தருவதாக, காரைக்குடியைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் அழகப்பன், 3.16 கோடி ரூபாய் பெற்றார். அதில், ‘பிளசிங் அக்ரோ பார்ம் இந்தியா லிமிடெட்’ என்ற நிறுவனம் மோசடி செய்தது.

இதுகுறித்த வழக்கில், அழகப்பன், நில புரோக்கர் நெல்லியான், பிளசிங் அக்ரோ பார்ம் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் உட்பட 12 பேர் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். பைனான்சியர் அழகப்பன் மீது நடிகை கவுதமி கொடுத்த நிலமோசடி வழக்கு விசாரணையில் உள்ளது.

நில மோசடி செய்த வழக்கில் ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சினிமா பைனான்சியர் அழகப்பனின் மேலாளர் ரமேஷ் ஷங்கருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்து நடிகை கவுதமி நேரில் ஆஜராகி மனு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்னே ஒன்னு நான் சொல்வேன். ஆரம்பத்தில் இருந்து சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இன்றைக்கும் சொல்வேன். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.