இரட்டை ஸ்கிரீன் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்

லாவா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

லாவா அக்னி 3
லாவா அக்னி 3 புதிய ஸ்மார்ட் போனானது 5ஜி அமைப்பைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு லாவா அக்னி 2 5ஜி மாடலை வெளியிட்டிருந்தது.

தற்போது வெளியாகியிருக்கும் லாவா அக்னி 3 5ஜி ஸ்மார்ட் போனில், அம்சங்களை பொருத்தவரை 6.78 இன்ச் 1.5K 3D Curved AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 7300X பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டுள்ளது. மேலும் மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்கள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கேமராவைப் பொறுத்தவரை 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 8MP 3x டெலிபோட்டோ கேமரா மற்றும் 16MP செல்பி கேமரா கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. எனினும், இந்த ஸ்மார்ட்போனுடன் சார்ஜர் வழங்கப்படவில்லை.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் இரண்டாவது AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் பிரிஸ்டைன் கிளாஸ் மற்றும் ஹீதர் கிளாஸ் என இரண்டுவிதமான நிறங்களில் கிடைக்கிறது.

இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்தது 999 என்றும் சார்ஜர் உடன் வாங்கும் போது இதன் விலை ரூ. 22 ஆயிரத்து 999 என மாறிவிடும்.

இதே போன்று 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல், சார்ஜர் உடன் சேர்த்து ரூ.24 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.