வருமான வரி செலுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு!

வரி செலுத்த வருமானம் இல்லை என்றால் வரி செலுத்துவதற்கான பதிவை ரத்துச் செய்ய வாய்ப்பு உள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

வருமான வரி செலுத்துவதற்கு பதிவு செய்திருந்த போதிலும், வர்த்தக நடவடிக்கைகளை நிறைவு செய்திருந்தல் அல்லது வருமான ஆதாரங்கள் இல்லாமை போன்ற காரணங்களால் வரி செலுத்தாதவர்களுக்கு இந்த அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வரி செலுத்த போதுமான வருமானம் அல்லது இலாபம் இல்லை என்றால், அதை நிரூபிக்கக்கூடிய ஆவணங்களை (30.11.2024) இற்கு முன் நிகழ்நிலை ஊடாக திணைக்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்தநிழலையில், (01.04.2023) முதல் (31.03.2024) வரை அதாவது 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளை அனுப்பும் வசதியை உள்நாட்டு இறைவரித் திணைக்கத்தின் இணையதளமான www.ird.gow.lk இல் காட்டப்பட்டுள்ள ஈ-சேவையை அணுகுவதன் மூலம் பெறலாம்.

மேலும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வரி செலுத்துவோரை பதிவு செய்வதற்காக 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட TIN இலக்கத்தின் கீழ் 2023/2024 ஆம் ஆண்டிற்கான வரி செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கை 868,009 ஆக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.