புதுடில்லி: ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள், அங்கேயே கட்டணம் செலுத்தி விசா பெற்றுக்கொள்ளும் புதிய வசதியை அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். இந்தியாவுக்கும் அந்நாட்டுக்கும் ஆழமான பொருளாதார உறவுகள் உள்ளன.இந்த உறவுகளை மேம்படுத்தவும், சுற்றுலா மற்றும் வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்தவும், ‘விசா ஆன் அரைவல்’ திட்டத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியர்களில், குறிப்பிட்ட சில தகுதி உடையோர் அமீரகத்துக்கு வந்த பிறகு விசா பெற முடியும்.
புதிய விசா சலுகை பெற என்ன தகுதிகள்
* அமெரிக்காவில் விசா அல்லது கிரீன் கார்டு பெற்றுள்ளவர்கள்.
* பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விசா அல்லது நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெற்றுள்ளவர்கள்.
* குறைந்தது 6 மாத கால மதிப்புள்ள பாஸ்போர்ட் இருப்பது அவசியம்.
* சுற்றுலா கூட்டங்களுக்கு 14 நாட்களுக்கான அனுமதி உண்டு. கூடுதலாக நாட்கள் வேண்டும் எனகேட்டுக்கொண்டால் அதற்கான பணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இத்தகைய தகுதிகளை கொண்டுள்ளோர், ‘விசா ஆன் அரைவல்’ திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.