இருளில் மூழ்கிய கியூபா

கியூபாவில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டால் சுமார் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கியூபாவின் மிகப்பெரிய மின் நிலையங்களில் ஒன்று செயலிழந்ததையடுத்து மின்சாரத்தடை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மின் பற்றாக்குறையை சமாளிக்க பாடசாலைகள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் ஒரு சில அரசு அலுவலகங்களை தற்காலிகமாக மூடுமாறு கியூபா அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடால் கியூபா மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.