தனது சட்டத்தை மாற்றிய வடகொரியா

தென்கொரியாவை எதிரி நாடு என்று குறிப்பிடும் வகையில் வடகொரியா தனது சட்டத்தை மாற்றி அமைத்துள்ளதாக வடகொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், வடகொரியா – தென் கொரியா இடையே மோதல்கள் காணப்பட்ட போதிலும் தென் கொரியாவை எதிரி நாடு என்று குறிப்பிடுவது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, தென் கொரியாவை நாட்டின் பிரதான எதிரியாக அறிவிக்கவும், அமைதியான கொரிய ஒருங்கிணைப்பு என்ற இலக்கை அகற்றவும், வட கொரியாவின் இறையாண்மை வரையறுக்கும் வகையில் அரசியலமைப்பை மாற்ற வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன