மூட்டு வலிக்கு தீர்வாகும் முடக்கத்தான் கீரை!

பொதுவாகவே முடக்கத்தான் கீரை எல்லா காலங்களிலும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு அரிய வகை கீரையாக பார்க்கப்படுகின்றது.

முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் செறிவாக காணப்படுவதால், அதழன தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் மலக்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் மற்றும் மூட்டுவலிக்கு சிறந்த தீர்வை வழங்குகின்றது.

முடக்கத்தான் கீரையில் புரதசத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டு, தாதூப்புகள் நிறைந்து காணப்படுவதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் அதன் வலிமைக்கு பெரிதும் துணைப்புரிகின்றது.

இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட முடக்கத்தான் கீரையை வைத்து வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த முடக்கத்தான் கீரை தோசை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முடக்கத்தான் கீரை – 1 கட்டு

பச்சை மிளகாய் – 1

பூண்டு – 2 பல்

இஞ்சி – 1/2 சிறிய துண்டு

மிளகு – 10

சீரகம் – 1/4 தே.கரண்டி

தோசை மாவு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
முதலில் முடக்கத்தான் கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் முடக்கத்தான் கீரை, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தோசை மாவை எடுத்து, அரைத்து வைத்துள்ள முடக்கத்தான் கீரை பேஸ்ட்டையும், சிறிதளவு மஞ்சள் தூளையும் அதனுடன் சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.

பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், தோசை ஊற்றி, தேவையான அளவு எண்ணெய்யும் சேர்த்து முன்னும் பின்னும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால், அவ்வளவு தான் ஆரோக்கியம் நிறைந்த முடக்கத்தான் கீரை தோசை தயார்.