யூடியூபர் இர்ஃபான் தனது யூடியூப் பக்கத்தில் மனைவிக்கு குழந்தை பிறக்கும் போது அவரின் தொப்பிள் கொடியை இர்ஃபான் வெட்டியது போன்ற வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.
சர்ச்சை வீடியோ
யூடியூபர் இர்பானுக்கு கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் அந்த இடத்தில் இர்பான் தன் மனைவிக்கு ஆறுதல் கூறி அவருடன் அன்பாக இருக்கிறார்.
இதன் போது இர்ஃபான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை பகிர்ந்திருந்தார்.
இந்த வீடியோ தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் தான் இந்த அறுவை சிகிச்சையை செய்ய வேண்டும் என்றும், தொப்புள் கொடியை இர்ஃபான் வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே ஒரு பதிவிட்ட வீடியோவான குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட வீடியோ சர்ச்சையான நிலையில் இது புதிய சர்ச்சையாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு இர்ஃபான் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை.